செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 30 ஏப்ரல் 2023 (07:42 IST)

மே மாதத்தில் அனல் காற்று வீசும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்தி வந்தாலும் ஒரு சில இடங்களில் கோடை மழை பெய்து வருவதால் கோடையின் வெப்பம் தணிந்து பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர் என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் ஒரு சில மாநிலங்களில் மே மாதத்தில் அனல் காற்று வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது. 
 
நாடு முழுவதும் கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் நாட்டின் கிழக்கு பகுதிகளில் மே மாதத்தில் அனல் காற்று வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் எச்சரிக்கை விடுத்துள்ளது. 
 
குறிப்பாக பீகார், ஜார்கண்ட், ஒடிசா ஆகிய மாநிலங்களில் வழக்கத்தை விட அதிகமான வெப்பநிலை இருக்கும் என்றும் வடவேற்கு மற்றும் மேற்கு மத்திய பகுதிகளில் இரவில் அதிக வெப்பநிலை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
பகல் நேரத்தில் வெப்பநிலை வழக்கத்தை விட குறைவாக இருந்தாலும் இரவில் மிக அதிகமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது. அதேபோல் ஹரியானா பஞ்சாப் ராஜஸ்தான் மற்றும் உத்தர பிரதேசம் ஆகிய பகுதிகளில் வழக்கத்தை விட அதிகமான அளவு மழை பொழிவும் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
கர்நாடகா ஆந்திரா கேரளா ஆகிய பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
Edited by Siva