இந்திய வங்கிகள் டெபாசிட்களை ஈர்ப்பதில் நெருக்கடி
இந்திய வங்கிகள் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு டெபாசிட்களை ஈர்ப்பதில் நெருக்கடியை சந்தித்து வருவதாக பிரபல தனியார் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2023-24 நிதியாண்டில் இந்திய வங்கிகள் டெபாசிட்களை ஈர்ப்பதில் கடுமையான சிரமங்களை சந்தித்திருப்பது தெரியவந்துள்ளது.
ஆர்.பி.ஐ-ன் தரவுகளின்படி வங்கிகள் கடன் வழங்குவது அதிகரித்திருப்பதும், வாடிக்கையாளர்களின் டெபாசிட் செய்வது குறைந்துள்ளது தெரியவந்துள்ளது.
கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத வகையில் வங்கிகளில் கடன் டெபாசிட் விகிதம் என்பது 80 சதவீதமாக அதிகரித்துள்ளதாக அந்த செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும், 2023-24 நிதியாண்டில் டெபாசிட் விகிதம் 13.5 சதவீதம் அதிகரித்த நிலையில், வாடிக்கையாளருக்கு கடன் வழங்கும் விகிதம் என்பது சுமார் 20.2 சதவீதம் அதிகரிப்பதாக அந்த நிறுவனத்தின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.