திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Updated : ஞாயிறு, 3 மே 2020 (11:02 IST)

கொரோனா போர் வீரர்களுக்கு இந்திய ராணுவம் மரியாதை !

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 39,980 பேர் பதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 10,633 பேர் குணமடைந்துள்ளனர். 1,301 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், இந்தியாவில் கொரொனாவுக்கு எதிராக தமது உயிரைப் பொருட்படுத்தாமல் போராடி வருகின்ற மருத்துவர்கள், செவிலியர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்திய ராணுவம் சார்பில் போர்விமானம் மூலம் நாட்டில் உள்ள மருத்துவமனைகளின் மீது மலர் மரியாதை செலுத்தப்பட்டது.

சென்னையில் உள்ள ஓமந்தூரார் மருத்துவமனை வளாகத்தில் பண்புரிகின்ற மருத்துவர்கள், செவிலியர்களுக்கு மலர் தூவும் ராணுவ விமானத்திற்கு கைகளை உயர்த்தி பதில் நன்றி தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.