35 கடற்கொள்ளையர்களை சிறைபிடித்த இந்திய கடற்படையினர்.. 40 மணி நேர போராட்டம்..!
கடந்த டிசம்பர் மாதம் கடத்தப்பட்ட மால்டா நாட்டு சரக்கு கப்பலை மீட்ட இந்திய கடற்படையினர் தற்போது 40 மணி நேர போராட்டத்திற்கு பிறகு 35 கடற்கொள்ளையர்கள் சிறைபிடித்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
1400 கடல் மைல் தொலைவில் அரபிக்கடலில் நடைபெற்ற சம்பவம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அரபிக்கடலில் சென்று கொண்டிருந்த சரக்கு கப்பலை திடீரென சோமாலிய கடற்கொள்ளையர்கள் கைப்பற்றிய நிலையில் இந்திய கடற்படையினர் அந்த கப்பலை தற்போது முழுமையாக மீட்டுள்ளனர்.
மீட்பு பணியின் போது கடற்படையினரை நோக்கி சோமாலிய கடற்கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டதாகவும், இந்திய கடற்படையினர் பதிலடி தாக்குதல் கொடுத்து முழுமையாக கப்பலை மீட்டதுடன், அந்த சரக்கு கப்பலில் இருந்த பல்கேரியா, மியான்மர், அங்காலா நாடுகளை சேர்ந்த 17 பேரை மீட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே இந்த கப்பலில் இருந்த இந்திய ஊழியர்கள் மீட்கப்பட்ட நிலையில் தற்போது கப்பலும் இந்திய கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.
Edited by Siva