1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 7 மார்ச் 2024 (16:03 IST)

ஹவுதி தாக்குதல்..சேதமடைந்த கப்பலில் இருந்து 21 பேரை மீட்ட இந்திய கடற்படை!

Indian navy
ஏடன் வளைகுடாவில் பார்படாஸ் கொடியுடன் எம்.வி.ட்ரூ கான்பிடன்ஸ் என்ற சரக்கு கப்பல் மீது  நேற்று ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர்.
 
ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் மூலம் நடத்தப்பட்ட இத்தாக்குதலில் கப்பல் கடுமையாக சேதமடைந்தது. ஏமனின் துறைமுக நகரமான ஏடனில் இருந்து 54 நாட்டிக்கல்தொலைவில் இத்தாக்குதல் நடந்ததாக தகவல் வெளியாகிறது.
 
இத்தாக்குதலில், கப்பலில் இருந்த 3 மாலுமிகள்  உயிரிழந்தனர்.  சிலர் காயமடைந்துள்ளனர்.
 
இதற்கிடையே, ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்திய கப்பலில் இருந்த மாலுமிகள், கப்பல் ஊழியர்கள் என மொத்தம் 21 பேரை ஐ.என்.எஸ்., கொல்கத்தா  போர்க்கப்பலில் சென்ற இந்திய கடற்படையினர் மீட்டுள்ளனர். மீட்கப்பட்டவர்களில் ஒருவர் இந்தியர் ஆவார்.
 
காயமடைந்தவர்களுக்கு கப்பில் உள்ள மருத்துவக் குழுவினர் முதலுதவி சிகிச்சை மேற்கொண்டனர்.  அதன்பின் மேற்சிகிச்சை அளிக்க வேண்டி,  ஜிபோட்டி நாட்டிற்கு கொண்டுசென்றனர்.