1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 27 செப்டம்பர் 2020 (11:56 IST)

தடுப்பூசி வாங்க இந்தியாகிட்ட காசு இருக்கா? – எஸ்.ஐ.ஐ கேள்வி!

இந்தியாவில் உள்ள மக்கள் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி வழங்கும் அளவிற்கு இந்தியாவிடம் பணம் உள்ளதா என சீரம் இன்ஸ்டிடியூட் கேள்வி எழுப்பியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் உலக நாடுகள் பல கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசியை கண்டறிவதில் முன்னேற்றத்தை அடைந்துள்ளன.

ஆக்ஸ்போர்டு நிறுவனம் உருவாக்கிய கோவிஷீல்ட் தடுப்பூசி இந்தியாவின் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனத்தால் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதுதவிர ரஷ்யாவின் தடுப்பூசியையும் வாங்க ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கொரோனா தடுப்பூசி குறித்து பேசியுள்ள எஸ்.ஐ.ஐ தலைமை நிர்வாக அதிகாரி “அடுத்த ஒரு வருடத்திற்கு இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகள் கொண்டு வர இந்தியாவிற்கு ரூ.80,000 கோடி தேவை. இதுவே இந்தியாவிற்கு உள்ள ஒரே வழி. இந்த கேள்விக்கு விடை கிடைத்தால் மட்டுமே தடுப்பூசி உற்பத்தியாளர்கள், கொள்முதல் மற்றும் விநியோகத்தின் அடிப்படையில் வழிகாட்ட முடியும்” என கூறியுள்ளார்.