செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 2 ஏப்ரல் 2019 (20:52 IST)

விண்வெளியில் குப்பையா? நாசா குற்றச்சாட்டுக்கு இந்தியா பதிலடி!

சமீபத்தில் இந்திய பிரதமர் மோடி 'மிஷன் சக்தி' குறித்த ஒரு அறிவிப்பை வெளியிட்டார். உலகின் விண்வெளியில் உள்ள செயற்கைகோளை தாக்கி அழிக்கும் வசதி பெற்ற உலகின் நான்காவது நாடு இந்தியா என்றும் பிரதமர் பெருமையுடன் அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு இந்திய எதிர்க்கட்சிகளே கண்டனம் தெரிவித்த நிலையில் தற்போது அமெரிக்காவின் நாசாவும் இதுகுறித்த குற்றச்சாட்டு ஒன்றை கூறியுள்ளாது.
 
அதாவது இந்த மிஷன் சக்தி சோதனையால் தாக்கப்பட்ட செயற்கைக்கோளின் துகள்கள் விண்வெளியில் அதிகம் இருப்பதாகவும், இதனால் விண்வெளியில் குப்பை அதிகரித்துள்ளதாகவும் நாசா குற்றஞ்சாட்டியது. மேலும், இந்தியாவின் இந்த சோதனையால் சுமார் 400 துகள்கள் சுற்றி வருவதாகவும் இந்த துகள்களால் விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி மையத்துக்கு ஆபத்து என்றும் நாசா குற்றஞ்சாட்டியது.
 
ஆனால் நாசாவின் இந்த குற்றஞ்சாட்டை இந்தியா கடுமையாக மறுத்துள்ளது. இது குறித்து இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் முன்னாள் தலைவர் வி.கே. சாராஸ்வாட் என்பவர் கூறுகையில்,  இந்தியாவின் வளர்ச்சியை பொறுத்து கொள்ள முடியாமல் அமெரிக்காவின் நாசா இந்த குற்றச்சாட்டை கூறுவதாகவும் ஏற்கனவே விண்வெளியில் லட்சக்கணக்கான குப்பைகள் சுற்றி வருவதாகவும் கூறியுள்ளார்.
 
மேலும் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு நாடுகளில் இருந்து 190 செயற்கை கோள்கள் ஏவப்படுவதாகவும், இவ்வாறு ஏவப்படும் ஒவ்வொரு செயற்கைகோளும் குப்பைகளை அதிகம் சேர்ப்பதாகவும், ஆனால் இந்தியாவின் மிஷன் சக்தி சோதனையால் மட்டும் குப்பை பெருகுவதாக குற்றஞ்சாட்டுவது அர்த்தமற்றது என்றும் கூறினார்.