1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Updated : வெள்ளி, 21 ஜனவரி 2022 (10:33 IST)

எனக்கு அரசியல் ஆசை இல்ல.. வாழு வாழ விடு..! – அஜித் பரபரப்பு அறிக்கை!

தனக்கு அரசியல் ஈடுபாடு இல்லையென்று கூறி ரசிகர்களுக்கு அஜித் வெளியிட்டுள்ள அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் அஜித்குமார் படங்களில் தொடர்ந்து நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். அவரை ரசிகர்கள் செல்லமாக தல என அழைத்து வந்த நிலையில் தன்னை அவ்வாறு அழைக்க வேண்டாம் என அஜித்குமார் சமீபத்தில் அறிக்கையும் வெளியிட்டிருந்தார். இந்நிலையில் நடிகர் அஜித்தின் பெயர் அடிக்கடி அரசியல் சார்ந்து பயன்படுத்தப்படுவதும், அவரது ரசிகர்கள் அவரது பெயரை அரசியல் சார்ந்து பயன்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து விரிவான அறிக்கை வெளியிட்டுள்ள நடிகர் அஜித்குமார், தனக்கு அரசியல் ஆசை அறவே கிடையாது என்றும், எந்த வகையிலும் தான் அரசியல்படுத்தப்படுவதை விரும்பாததால்தான் ரசிகர் மன்றம் உள்ளிட்டவற்றை கலைத்ததாகவும் தெரிவித்துள்ளார். சினிமா மட்டுமே தனது தொழில் என தெரிவித்துள்ள அவர் தனது ரசிகர்கள் தனது பெயர் மற்றும் புகைப்படத்தை அரசியல் சார்ந்து பயன்படுத்த வேண்டாம் என கூறி இறுதியாக “வாழு வாழ விடு” என்று அறிக்கையை முடித்துள்ளார்.