1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Caston
Last Modified: திங்கள், 22 மே 2017 (10:35 IST)

இந்தியாவின் மிகப்பெரிய ஊழலை செய்த மோடி: சிதம்பரம் பகீர்!

இந்தியாவின் மிகப்பெரிய ஊழலை செய்த மோடி: சிதம்பரம் பகீர்!

கடந்த 20-ஆம் தேதி இந்திராகாந்தி நூற்றாண்டு விழாவில் பேசிய முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், மோடி கொண்டு வந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் ஏழைகள் மிகவும் பாதிக்கப்பட்டனர் எனவும் அதுதான் இந்தியாவின் மிகப்பெரிய ஊழல் எனவும் கூறினர்.


 
 
தூத்துக்குடியில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ் மற்றும் தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
 
இந்த கூட்டத்தில் பேசிய ப.சிதம்பரம் இந்தியாவில் பல இடங்களில் வெற்றி பெற்ற பாஜகவால் தமிழகத்தில் மட்டும் வெற்றிபெற முடியாமல் போனதற்கு ஒரே காரணம், தமிழக மக்கள் முட்டாள்கள் இல்லை என்பதே ஆகும்.
 
500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மோடி அறிவித்தார். இந்த நடவடிக்கையால் ஊழல், கறுப்பு பணம், கள்ள நோட்டு ஆகியவை ஒழியும் என்றும் அவர் உறுதியளித்தார். ஆனால் இதனால் கறுப்புப் பணம் ஒழியவில்லை. மாறாக ஏழைகளே பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
 
வருமான வரித்துறையினரின் சோதனைகளில் பல கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்படுகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் ஊழல் ஒழியவில்லை. பிரதமர் மோடியின் பண மதிப்பிழப்பு அறிவிப்புதான் இந்தியாவின் மிகப்பெரிய ஊழல் என சிதம்பரம் கூறினார்.