புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Updated : ஞாயிறு, 1 டிசம்பர் 2019 (15:21 IST)

தொடரும் வெங்காய தட்டுப்பாடு: வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி!

இந்தியாவில் வெங்காயத்துக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் வெளிநாடுகளில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்தியாவில் வெங்காயம் அதிகமாக விளையும் வட மாநிலங்களில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் நாடெங்கிலும் வெங்காயத்துக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் வெங்காய விலையும் உயர்வை சந்தித்து வருகிறது.

வெங்காய பற்றாக்குறையை போக்க துருக்கு மற்றும் எகிப்திலிருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. அதன்படி முதலாவதாக துருக்கியிடம் இருந்து 11 ஆயிரம் மெட்ரிக் டன் வெங்காயம் இறக்குமதி செய்யப்பட உள்ளது. இந்த வெங்காயம் ஜனவரி முதல் வாரத்தில் இந்தியா வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் டிசம்பர் இறுதிக்குள் எகிப்து நாட்டிலும் 6 ஆயிரம் மெட்ரிக் டன் வெங்காயம் இறக்குமதி செய்ய அரசு திட்டமிட்டுள்ளது.