ஊரடங்கு உத்தரவு செப்டம்பர் வரை நீடிக்குமா? அதிர்ச்சி தகவல்
ஊரடங்கு உத்தரவு செப்டம்பர் வரை நீடிக்குமா?
இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு மார்ச் 24ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 14ஆம் தேதி வரை இருக்கும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில் தற்போது ஏப்ரல் 4ஆம் தேதி ஆகிவிட்டதால் இன்னும் 10 நாட்கள் பல்லை கடித்துக்கொண்டு சமாளிக்க மக்கள் அனைவரும் தயாராகி வந்தனர்
இந்த நிலையில் திடுக்கிடும் தகவலாக செப்டம்பர் மாதம் வரை இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்த வாய்ப்பு இருப்பதாக அமெரிக்காவின் ஆய்வு நிறுவனமான பாஸ்டன் என்ற நிறுவனம் தெரிவித்துள்ளது
இந்தியாவில் ஜூன் மாதத்தின் மூன்றாவது வாரத்தில் தான் கொரோனா பாதிப்பு உச்சகட்டத்தில் இருக்கும் என்றும் அதனால் ஜூலை அல்லது செப்டம்பர் வரை ஊரடங்கு உத்தரவை நீடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்து
ஆனால் இந்தியாவைப் பொருத்தவரை கொரோனாவின் தாக்கம் இன்னும் மூன்றாவது ஸ்டேஜுக்கு செல்லவில்லை என்பதால் அதிக நாட்கள் ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது. ஒருவேளை அமெரிக்க நிறுவனம் கூறியபடி செப்டம்பர் வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டால் கொரோனாவிற்கு பலியாகும் எண்ணிக்கையை விட பட்டினியால் இழக்கப்படும் உயிர்களின் எண்ணிக்கை அதிகம் இருக்கும் என்றும் சமூக ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.