வியாழன், 31 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 31 அக்டோபர் 2024 (09:58 IST)

இந்தியா - சீனா படைகள் வாபஸ் பெறும் பணி முடிந்தது.. இரு நாடுகள் இடையே சமாதானம்..!

கிழக்கு லடாக் எல்லை பகுதியில் இந்தியா - சீனா ராணுவப் படைகள் திரும்ப பெறும் பணி நிறைவுற்றதை அடுத்து, இரு நாட்டிற்கிடையே சமாதானம் ஏற்பட்டுள்ளதாகவும், இந்திய ராணுவத்தினர் மற்றும் சீன ராணுவத்தினர் இன்று தீபாவளியை முன்னிட்டு இனிப்புகளை பரிமாறிக் கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 
 
கடந்த சில ஆண்டுகளாக இந்தியா - சீனா எல்லையில் போர் பதற்றம் நிலவிய நிலையில், இரு நாட்டு ராணுவத்தினர் எல்லையில் ராணுவப் படைகளை நிறுத்தியிருந்தனர். 
 
2020 ஆம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இரு தரப்பின் ராணுவ வீரர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர் என்றும் கூறப்பட்டது. இதனால், இந்திய - சீன உறவில் விரிசல் ஏற்பட்டு, தூதரக அதிகாரிகள் மற்றும் பிரதமர் மட்டம் மற்றும் அதிபர் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. 
 
இதன் பின்னர் இரு தரப்பினரும் படைகளை வாபஸ் பெற தீர்மானித்துள்ளனர். சமீபத்தில் பிரிக்ஸ் மாநாட்டில் சீன அதிபரை இந்திய பிரதமர் மோடி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதன் விளைவாக, இரு நாடுகளுக்கு இடையே தற்போது சமாதானம் ஏற்பட்டுள்ளது. 
 
இதனை அடுத்து, இன்று இந்தியா - சீனா ராணுவ வீரர்கள் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக் கொண்டு நட்பை புதுப்பித்துக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
 
Edited by Siva