1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 28 அக்டோபர் 2024 (18:08 IST)

மகாராஷ்டிரா தேர்தலில் போட்டியில்லை: ஹரியானா தோல்வியால் அரவிந்த் கெஜ்ரிவால் முடிவு..!

arvind kejriwal
சமீபத்தில் நடந்த ஹரியானா மாநில தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டு சேராமல் ஆம் ஆத்மி கட்சி தனித்து போட்டியிட்டதால் இரு கட்சிகளும் தோல்வி அடைந்து பாஜக ஆட்சியை பிடித்தது. இந்த நிலையில், விரைவில் நடைபெற இருக்கும் மகாராஷ்டிரா மாநில தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடாது என்றும் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு அளிக்கும் என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
 
மகாராஷ்டிராவில் நவம்பர் 20ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கின்ற நிலையில், எதிர்க்கட்சி கூட்டணி வலிமையாக இருப்பதாகவும், பாஜக கூட்டணியும் கடும் சவாலாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில், ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டு படுதோல்வி அடைந்த நிலையில், இதே போன்ற ஒரு நிலை மகாராஷ்டிரா மாநிலத்திலும் வந்துவிடக்கூடாது என்பதற்காக, மகாராஷ்டிரா மாநில தேர்தலில் போட்டியில்லையென அறிவித்ததோடு, இந்தியா கூட்டணிக்கு ஆதரவு எனவும் ஆம் ஆத்மி அறிவித்துள்ளது.
 
மகாராஷ்டிரா தேர்தலில் சீட் கொடுக்க, தேசியவாத காங்கிரஸ் உள்பட சில கட்சிகள் தெரிவித்ததாகவும், ஆனால் இங்கு போட்டியிடுவது முக்கியமில்லை; பாஜக கூட்டணி அரசை அகற்றுவது தான் முக்கியம் என்ற காரணத்தினால், ஆம் கட்சி போட்டியிடவில்லை என அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
 
ஹரியானா மாநிலத்தில் தனித்து நின்றதால் வாக்குகள் பிரிந்த தோல்வி ஏற்பட்ட நிலையில், அதேபோன்ற ஒரு நிலைமை மகாராஷ்டிரா மாநிலத்தில் வரக்கூடாது என்பதை முன்னிட்டு, அரவிந்த் கெஜ்ரிவால் இந்த முடிவை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
Edited by Mahendran