வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 12 ஜூன் 2020 (08:29 IST)

இங்கிலாந்தையும் பின்னுக்குத் தள்ளிய இந்தியா – கொரோனா பாதிப்பில் நான்காவது இடம்!

இந்தியா உலகளவில் கொரோனா பாதிப்பில் நான்காவது இடத்துக்கு சென்றுள்ளது.

இந்தியாவில் முதலில் மிதமாக இருந்த கொரோனா வைரஸ் தாக்கம் இப்போது மிகவேகமாகப் பரவி வருகிறது. நாளுக்கு நாள் இந்தியாவில் 15,000 பேருக்கு மேல் புதிதாக பாதிக்கப்படுகின்றனர். இதனால் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்த நாடுகளின் பட்டியலில் கீழே இருந்த இந்தியா நாளுக்கு நாள் மேலே சென்றுகொண்டே இருக்கிறது.

சில நாட்களுக்கு முன்னர் ஐந்தாவது இடத்தில் இருந்த இந்தியா(2,97,001) நேற்று இங்கிலாந்தை (2,91, 409) பின்னுக்கு தள்ளி நான்காவது இடத்துக்கு சென்றுள்ளது. இந்தியாவுக்கு அமெரிக்கா (2,071,489), பிரேசில் (7,77,581) மற்றும் ரஷ்யா (5,02,436) ஆகிய நாடுகள் உள்ளன.