ராஜ்யசபா அவைத்தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்: இண்டியா' கூட்டணி அதிரடி..!
ராஜ்யசபா தலைவருக்கு எதிராக இந்தியா கூட்டணி நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராஜ்யசபா அவை தலைவராக ஜக்தீப் தன்கர் இருந்து வரும் நிலையில், அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் செயலாளரிடம் தாக்கல் செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ஆரம்பித்த முதல் நாளிலிருந்து, அதானிக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மோசடி வழக்கு தொடர்பாக விவாதிக்க வலியுறுத்தி மக்களவை மற்றும் மாநிலங்களவையில் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், சோனியா காந்திக்கு இந்தியாவுக்கு எதிரான அமெரிக்க தொழிலதிபருடன் நெருக்கமாக இருப்பதாக பாஜக கூறி வருவதால், பாராளுமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில், ராஜ்யசபா தலைவர் ஜக்தீப் தன்கருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை ராஜ்யசபா செயலாளர் இடம் இந்தியா கூட்டணி கட்சிகள் மனு தாக்கல் செய்துள்ளனர். வேறு வழியில்லாமல் இந்தியா கூட்டணி இந்த முடிவை எடுத்ததாகவும், ஒருதலைபட்சமாக ராஜ்யசபா தலைவர் நடந்து கொள்கிறார் என்றும், இது வேதனையான ஒன்று என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
Edited by Siva