செவ்வாய், 21 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : சனி, 16 மார்ச் 2024 (21:08 IST)

குறைந்தபட்ச ஊதியம் ரூ.400-தொழிலாளர்களுக்கு காங்., உத்தரவாதம்

congress
நாடாளுமன்ற தேர்தலையொட்டி, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட  தேசிய கட்சிகளும், அதிமுக, தேமுதிக, பாமக உள்ளிட்ட  மாநில கட்சிகளும் கூட்டணி, தொகுதிப் பங்கீடு பற்றி பேச்சுவார்த்தை நடத்தி  பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது.
 
ஏற்கனவே காங்கிரஸ் கட்சியின் 2 வது கட்ட  வேட்பாளர் பட்டியல் வெளியானது.
 
இதில், முக்கிய வேட்பாளர்கள் யார் என்ற தகவல் இருந்தது.
 
மக்களவை தேர்தலையொட்டி, உழவர் நீதி, இளைஞர் நீதி, மகளிர் நீதி, உள்ளிட்ட தலைப்புகளின் கீழ் காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்தது. அதில், ஏழை குடும்பத்து பெண்களுக்கு ஆண்டிற்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை  மத்திய அரசில் காலியாக உள்ள 30 லட்சம் பணிகள் நிரப்பப்படும் என்று அறிவித்திருந்தது.
 
இந்த நிலையில், இன்று தொழிலாளர் நீதி என்ற பெயரில் தொழிலாளர்களுக்கு காங்கிரஸ் வாக்குறுதிகள் அறிவித்துள்ளது.
 
அதன்படி, தேசிய அளவில் குறைந்தபட்ச ஊதியம் நாள் ஒன்றுக்கு ரூ.400 ஆக  உயர்த்தப்படும்.
 
மகாத்மா காந்தி வேலைவாய்ப்பு திட்ட தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச  ஊதியம் ரூ.400 ஆக உயர்த்தப்படும்.
 
அமைப்பு சாரா வேலைவாய்ப்பு உத்தரவாத சட்டம் கொண்டுவரப்படும் என்று தெரிவித்துள்ளது.
 
மேலும், சமூக பாதுகாப்பு, பாதுகாப்பான வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றுடன் இதர சலுகைகள் தனியார் துறைக்கும் கட்டாயமாக்கப்படும்; தற்போதைய அரசாங்கத்தால் நிறைவேற்ற்றப்பட்ட  தொழிலாளர் சட்டவிரோத சட்டங்கள் மறு ஆய்வு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது.