1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 21 மே 2021 (07:32 IST)

வருமான வரி தாக்கல் செய்ய காலநீட்டிப்பு வழங்கி அறிவிப்பு!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக வருமான வரித் துறை தாக்கல் செய்ய கால நீட்டிப்பு வழங்கி வருமானவரித் துறை உத்தரவிட்டுள்ளது 
 
ஜூலை மாதம் 31ஆம் தேதிக்குள் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது செப்டம்பர் 31-ஆம் தேதி வரை கால நீட்டிப்பு வழங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
வருமான வரி தாக்கல் செய்வதற்கான தனிநபர் மற்றும் நிறுவனங்களுக்கான கடைசி தேதி குறித்த முழு தகவல் இதோ
 
தனிநபர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கடைசி தேதி செப்டம்பர் 30ஆம் தேதி
 
நிறுவனங்கள் வருமான வரி தாக்கல் செய்ய கடைசி தேதி நவம்பர் 30 
 
நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் படிவம்-16 அளிப்பதற்கான கடைசி தேதி ஜூலை 15 
 
நிதி நிறுவனங்கள் நிதி பரிவர்த்தனை அறிக்கை தாக்கல் செய்ய கடைசி தேதி ஜூலை 30-ஆம் தேதி 
 
வரி தணிக்கை அறிக்கை தாக்கல் செய்ய கடைசி தேதி அக்டோபர் 30-ஆம் தேதி 
 
திருத்தப்பட்ட வரி கணக்கு தாக்கல் செய்ய கடைசி தேதி அடுத்த ஆண்டு ஜனவரி 30-ஆம் தேதி