1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 27 அக்டோபர் 2021 (16:58 IST)

ரிக்சா ஓட்டுனருக்கு ரூ.3.50 கோடி வருமான வரி: அதிர்ச்சி தகவல்

தினசரி 500 ரூபாய் மட்டுமே வருமானம் ஈட்டும் ரிக்ஷா ஓட்டும் தொழிலாளி ஒருவருக்கு மூன்றரை கோடி ரூபாய் வருமான வரி விதித்து வருமான வரித்துறை அலுவலகம் உத்தரவிட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பிரதாப் சிங் என்ற ரிக்ஷா ஓட்டுநர் தினசரி 500 ரூபாய் மட்டுமே சம்பாதித்து வருகிறார். இந்த நிலையில் அவருக்கு 3.47 கோடி ரூபாய் வருமான வரி செலுத்த வேண்டும் என வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது
 
இதனை அடுத்து அதிர்ச்சி அடைந்த அவர் வருமானவரித்துறை அதிகாரிகளிடம் சென்று விசாரித்த போது அவருடைய பான் கார்டை பயன்படுத்தி 43 கோடி ரூபாய் பரிவர்த்தனை நடந்து இருப்பதாக கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில் இது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்த போது அவரிடம் இருப்பது உண்மையான பான் கார்டு அல்ல என்றும் ஜெராக்ஸ் காப்பி தான் என்றும் அந்த உண்மையான பான்கார்டை டெல்லியைச் சேர்ந்த நிறுவனமொன்று மோசடியாக பயன்படுத்தி கோடிக்கணக்கில் பரிவர்த்தனை செய்து உள்ளது என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து போலீசார் மேலும் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றன