செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 5 அக்டோபர் 2021 (11:22 IST)

பச்சையப்பாஸ் துணிக்கடையில் ஐடி ரெய்ட்!!

காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பாஸ் துணிக்கடையில் வரி ஏய்ப்பு புகாரின் பெயரில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை. 
 
கடந்த 1926 ஆம் ஆண்டு பச்சையப்ப முதலியார் என்பவரால் காஞ்சிபுரத்தில் தொடங்கப்பட்டது பச்சையப்பாஸ் துணிக்கடை. காஞ்சிபுரம் மட்டுமின்றி சென்னை மற்றும் வேலூரில் இதன் கிளைகள் உள்ளது. 
 
இந்நிலையில் சென்னை, காஞ்சிபுரம், வேலூரில் இந்த துணிக்கடை மற்றும் அதை சார்ந்த நிதி நிறுவனங்கள் உள்பட 30 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. 
 
இக்கடை மீது வரி ஏய்ப்பு புகார் வந்ததன் பெயரில் சுமார் 30 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.