வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 1 ஜூன் 2023 (20:27 IST)

திருமணமான 20 நாளில் மனைவியை காதலனிடம் ஒப்படைத்த கணவர்

jharkhand
ஜார்கண்ட் மாநிலத்தில்  முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்குள்ள கிலா என்ற கிராமத்தில் வசிப்பவர்  மனோஜ்குமார் சிங். இவருக்கு கடந்த மே மாதம் 10 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.
 
இவர் துர்க்கடி என்ற பகுதியைச் சேர்ந்த பிரியங்கா குமாரியை மணந்தார். இவர்கள் திருமணம் சமீபத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது.
 
இத்திருமணத்திற்கு முன்பு மணப்பெண் பிரியங்கா குமாரி  கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஜிதேந்திர விஸ்வகர்மா என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்த நிலையில், இவர்கள் இருவீட்டிலும் திருமணத்திற்கு எதிர்ப்பு வலுத்துள்ளது.
 
இதனால், பிரியங்கா குமாரியை அவரது பெற்றோர் மனோஜ்குமார் சிங்கிற்கு திருமணம் செய்து வைத்தனர். ஆனால், திருமணத்திற்குப் பிறகும் பிரியங்கா, காதலர் ஜிதேந்திராவை மறக்க முடியாமல், அவருடன் செல்போனில் பேசி வந்துள்ளார். ஓடிப்போய் இருவரும் திருமணம் செய்துகொள்ளவும் முடிவெடுத்து, வீட்டை விட்டு ஓடிவிட்டனர்.
 
இதுபற்றி மனோஜ்குமாருக்கு தெரிவிக்கப்பட்டது. பின்னர், அவர் கோபப்படாமல், தன் மனைவியை அவரது காதலரிடம் ஒப்படைத்தார். இவ்விவகாரம் போலீஸுக்கு சென்ற நிலையில் யாரும் புகாரளிக்காத நிலையில், வழக்குப் பதிவு செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது.