திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinojkiyan
Last Updated : செவ்வாய், 22 அக்டோபர் 2019 (18:01 IST)

இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருந்தால்... இனி ’அது கிடைக்காது’ ! அரசு அதிரடி : மக்கள் அதிர்ச்சி

இந்தியாவில்ன் மக்கள் தொகை இன்னும் சில ஆண்டுகளில்  அதிக மக்கள் தொகை கொண்ட சீனாவை மிஞ்சிவிடும் நிலையில் உள்ளது. சில நாட்களுக்கு முன்னர் தேசிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மொபைல் ஆப் மூலமாக நடத்தப்படுமென  உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். இந்நிலையில் இரண்டு குழந்தைகளுகு மேல் இருப்பவர்களுக்கு அரசு வேலை இல்லை என அதிரடியாக அறிவித்துள்ளது.
அசாம் மாநிலத்தில் சர்பானந்தா தலையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இன்று, முதல்வர் தலைமையிலான அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில், மாநிலத்தில், இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருப்பவர்களுக்கு அரசு வேலை இல்லை என்று அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
 
இந்நிலையில், முக்கிய எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள், அம்மாநில அரசின் இம்முடிவுக்கு எதிர்ப்பு தெரிப்பார்கள் என தகவல்கள் வெளியாகிறது.