1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 31 ஆகஸ்ட் 2019 (14:08 IST)

’குடியுரிமை பதிவேட்டில்’ 19 லட்சம் பேர் இடம்பெறவில்லை - அதிருப்தியில் மக்கள் !

நம் நாடு துணைக்கண்டமாக பரந்துவிரிந்தது. பன்முகங்களைக்கொண்டது. பல மாநில மக்கள் பல மொழிகள் பேசினாலும் இந்தியர் என்ற ஒன்றுமைக்கு உலகில் அடையாளமாக உள்ளனர். இந்நிலையில் இந்தியாவில் அசாம் மாநிலத்தில் மட்டும்தான் தேசிய குடியுரிமைப்  பதிவேடு உள்ளது. தற்போது இந்தப் பதிவேட்டில் 19 லட்சம் மக்களின் பெயர்கள் இடம்பெறாதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அம்மக்கள் தம் அதிருப்தியை தெரிவித்துவருகின்றனர்.
இந்தியாவில் அசாம் மாநிலத்தில் மட்டும் ஏன் இந்த தேசியக் குடியுரிமைப் பதிவு உள்ளது என்றால் , அண்டை நாடான வங்க தேசத்திலிருந்து எல்லை வழியே ஊடுருவி அசாமில் சட்டத்திற்கு விரோதமாக தங்கியுள்ளனர். இவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துவருகிறது. இதன்பொருட்டு அசாம் மக்கள் யார் ? வங்க தேசத்தவர் யார் ? என்பதை அடையாளம் காண முடியாமல் அங்குள்ள அதிகாரிகள் திணறிவருகின்றனர்.
 
இதற்காகவே நம் இந்திய அரசு கடந்த 1951 ஆம் ஆண்டுமுதல் அசாம் மாநிலத்தில் இந்த தேசியகுடியுரிமைப் பதிவேடை தயாரித்து மக்களை அடையாளம் கண்டுவருகிறது.

இந்நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு தேசியப் பதிவேடு பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் சுமார் 40 லட்சம் பேர்வரை இல்லாமல் போனது பெரும் சர்ச்சையை கிளப்பியது.37 லட்சம் பேர்வரை நிராகரிக்கப்ட்டனர். மேலும் சில லட்சம் பேர்கள் காத்திருப்பு பட்டிலில் வைத்தனர்.
 
இந்நிலையில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி இன்று புதியகுடியுமக்கள் பதிவேடு வெளியிட்டுள்ளது அம்மாநில அரசு. இந்தப் பட்டியலில் 19 லட்சத்து 6657 மக்கள் பெயர்கள் இடம்பெறாதது கடும் அதிர்ச்சியிஅ ஏற்படுத்தியுள்ளது.
 
இப்பட்டியலில் பெயர் இடம்பெறாதவர்கள் தாங்கள் இந்தியர் என்பதற்காக தக்க ஆதாரத்தை தீர்பாயத்தில் காண்பித்து தம்மை பட்டியலில் சேர்க்க வலியுறுத்த வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
 
இதனால் பல் ஆண்டுகளாக அசாமில் வாழ்ந்துவந்த மக்கள் கடும் அதிருப்தியை தெரிவித்துவருகின்றனர்.  இந்த விவகாரம் இந்திய அளவில் பெரும் பேசுபொருளாகியுள்ளது  குறிப்பிடத்தக்கது.