வெள்ளி, 8 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth.K
Last Modified: செவ்வாய், 22 ஆகஸ்ட் 2023 (12:18 IST)

”வெங்காயம் விலை அதிகம்னா.. சாப்பிடாம இருங்க!” – அமைச்சரின் சர்ச்சை பதிலால் அதிர்ச்சி!

sambar onion
வெங்காயம் விலை உயர்வு குறித்து மகாராஷ்டிரா அமைச்சர் பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.



இந்திய உணவுப் பொருட்களில் அத்தியாவசிய பங்கு வகிப்பது வெங்காயம். கடந்த சில மாதங்களாக பெய்த கனமழையால் வெங்காய சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதால் வரும் நாட்களில் வெங்காய விலை அதிகரிக்கலாம் என மத்திய அரசு கணித்துள்ளது. இதனால் வெங்காய கையிருப்பை அதிகப்படுத்தி வருவதுடன், ஏற்றுமதிக்கு 40% ஆக வரியை உயர்த்தியுள்ளது.

இதனால் சர்வதேச அளவில் வெங்காய விலை உயர்வை காணும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதேசமயம் இந்தியாவில் வெங்காய விலையை குறைக்கவும், குறைந்த விலையில் வெங்காயத்தை வழங்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனினும் கடந்த சில நாட்களாக வெங்காய விலை உயர்வை கண்டு வருகிறது.

இதுகுறித்த கேள்விக்கு பதில் அளித்த மகாராஷ்டிரா அமைச்சர் தாதா யூஸ் “வெங்காய விலை அதிகமாக இருப்பதாக கருதினால் அதனை சாப்பிடாமல் இருங்கள். அடுத்த 3 மாதங்களுக்கு வெங்காயத்தை உணவில் சேர்க்காமல் இருப்பதால் உடல் நலம் ஒன்று கெட்டுப்போக போவதில்லை” என பேசியுள்ளார். அவரது இந்த பேச்சு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K