செவ்வாய், 26 செப்டம்பர் 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 23 மே 2023 (13:02 IST)

சாலையில் மூட்டை மூட்டையாக கிடந்த வெங்காயம்.. போட்டி போட்டு தூக்கி சென்ற பொதுமக்கள்..!

சாலையில் மூட்டை மூட்டையாக கிடந்த வெங்காயத்தை பொதுமக்கள் போட்டி போட்டுக்கொண்டு எடுத்துச் சென்ற சம்பவம் சென்னை அருகே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
சென்னை அருகே குன்றத்தூர் செல்லும் வழியில் சாலை ஓரங்களிலும் சாலை நடுவிலும் மூட்டை மூட்டையாக வெங்காயம் இருந்தது. இதனை பார்த்த அந்த வழியாக சென்ற பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் வெங்காய மூட்டைகளை எடுத்துச் சென்றனர். ஒரு சில நிமிடங்களில் வெங்காயம் முட்டைகள் அனைத்தும் காணாமல் போய்விட்டான என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இது குறித்து கேள்விப்பட்ட காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மூட்டை மூட்டையாக வெங்காயத்தை விட்டுச் சென்றவர்கள் யார் என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் சில மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
 
Edited by Mahendran