வெங்காயத்திற்கு 40% வரி உயர்வு! மத்திய அரசின் முடிவுக்கு என்ன காரணம்?
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் வெங்காயத்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான வரியை மத்திய அரசு உயர்த்தியுள்ளது.
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் தக்காளி, வெங்காயம், அரிசி உள்ளிட்ட பல உணவுப்பொருட்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. நாட்டின் உணவு தேவை மற்றும் பற்றாக்குறையை கணக்கிட்டு இந்த ஏற்றுமதியை அரசு கட்டுப்படுத்தி வருகிறது. அவ்வாறாக சமீபத்தில் அரிசி ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டது.
அந்த வகையில் தற்போது வெங்காயம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய ஏற்றுமதி வரியை 40% ஆக மத்திய அரசு அறிவித்துள்ளது. சமீபத்தில் தக்காளி வரத்து குறைவால் விலை அதிகரித்தது. அதுபோல வெங்காயத்தின் விலை உயர்வதை தடுக்க மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. வெங்காயம் மீதான ஏற்றுமதி வரி வரும் டிசம்பர் மாதம் வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Edit by Prasanth.K