வியாழன், 10 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 16 செப்டம்பர் 2024 (10:41 IST)

இட்லி சாப்பிடும் போட்டி! தொண்டையில் இட்லி சிக்கிய பலியான நபர்! - கேரளாவில் சோகம்!

A Man died

கேரளாவில் நடைபெற்ற உணவு போட்டி ஒன்றில் கலந்து கொண்ட நபர் தொண்டையில் இட்லி சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

பல்வேறு பகுதிகளிலும் விதவிதமான உணவுப் போட்டிகள் நடப்பது சமீப காலமாக அதிகரித்துள்ளது. அதிக அளவில் உணவு சாப்பிடுபவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்படுவதால் பலரும் இதுபோன்ற போட்டிகளில் கலந்து கொள்ள விரும்புகின்றனர். 

 

அப்படியாக கேரளாவில் ஓணம் பண்டிகையையொட்டி கஞ்சிக்கோடு பகுதியில் உணவு போட்டி நடத்தப்பட்டுள்ளது. அதில் பங்கேற்று அதிகமான இட்லி சாப்பிடுபவர்களுக்கு பரிசு என அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த பகுதியை சேர்ந்த சுரேஷ் என்ற நபரும் இந்த போட்டியில் கலந்துக் கொண்டுள்ளார்.
 

 

போட்டியின்போது அவசர அவசரமாக அவர் இட்லிகளை விழுங்கியதில் அது தொண்டையில் சிக்கி சிறிது நேரத்தில் சுரேஷ் மூர்ச்சையடைந்துள்ளார். உடனடியாக அவரை மருத்துவமனை கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஓணம் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட இந்த அசம்பாவிதம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K