செவ்வாய், 10 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 20 ஆகஸ்ட் 2024 (10:50 IST)

ரஷ்யா - உக்ரைன் போர்.. ஏவுகணை தாக்குதலில் கேரள இளைஞர் பலி.. அதிர்ச்சி தகவல்..!

ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையே ஒரு ஆண்டுக்கு மேலாக போர் நடந்து வரும் நிலையில் இன்று நடந்த ஏவுகணை தாக்குதலில் ரஷ்ய ராணுவ முகாமில் பணியாற்றிய கேரளாவை சேர்ந்த 36 வயது சந்தீப் என்பவர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது அவரது குடும்பத்திற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கேரளாவில் திருச்சூர் மாவட்டம் நாயரங்காடி என்ற கிராமத்தைச் சேர்ந்த சந்தீப் என்பவர் ரஷ்யாவில் உள்ள ஓட்டல் ஒன்றில் வேலை பார்ப்பதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன் சென்றார்.

இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கும் உள்ள ரஷ்ய ராணுவ கேண்டினில் சந்தீப் பணியாற்றி வந்த போது ஏவுகணை தாக்குதல் ஏற்பட்டதாகவும் இதில் சந்தீப் உயிரிழந்து விட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை ரஷ்ய ராணுவம் சரி பார்த்து அவரது பெற்றோருக்கு தகவல் அனுப்பி உள்ளதாக அவரது குடும்பத்தில் தெரிவித்துள்ளனர்

ரஷ்யா சென்ற பின்னர் ஒரு மாத சம்பளத்தை மட்டுமே சந்தீப் வீட்டுக்கு அனுப்பி இருக்கும் நிலையில் திடீரென அவர் இறந்து விட்டார் என்ற தகவல் அவரது குடும்பத்திற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சந்தீப்புக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்றும் அவரது தாய், தந்தை ஆகிய இருவருமே விவசாயிகள் என்றும் கூறப்படுகிறது.

Edited by Mahendran