ஒமைக்ரானை 4 மணி நேரத்தில் கண்டறியும் கருவிக்கு அனுமதி!
ஒமிக்ரானை 4 மணி நேரத்தில் கண்டறியும் நவீன ஆர்.டி.பிசிஆர் கருவிக்கு மருந்து தரக்கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி.
தென் ஆப்பிரிக்காவில் இருந்து பரவியுள்ள ஒமிக்ரான் வேரியண்ட் உலக நாடுகளை மீண்டும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் ஒமிக்ரான் தொற்று வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் பல்வேறு மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் ஒமிக்ரானை 4 மணி நேரத்தில் கண்டறியும் நவீன ஆர்.டி.பிசிஆர் கருவி உருவாக்கப்பட்டுள்ளது. டாடா, ஐசிஎம்ஆர் இணைந்து உருவாக்கிய கருவிக்கு மருந்து தரக்கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.