டெய்லி மோடியின் பிறந்தநாளா இருக்க கூடாதா? ப.சி-யின் விபரீத ஆசை!
பிரதமர் நரேந்திர மோடி அவரது பிறந்தநாளை தினமும் கொண்டாட வேண்டும் என்று விரும்புவதாக ப.சிதம்பரம் டிவிட்டர் பதிவு.
பிரதமர் மோடியின் 71வது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று 2.5 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு சாதனை படைக்கப்பட்டது. இதற்கு முன் ஒரு கோடி தடுப்பூசி ஒரே நாளில் செலுத்தப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவை ஒன்றை போட்டுள்ளார்.
அதில், பிரதமர் மோடியின் பிறந்தநாளான நேற்று ஒரே நாளில் இந்தியா முழுவதும் 2.5 கோடி டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. உத்திரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், குஜராத், கர்நாடகத்தில் மோடி பிறந்தநாளன்று தினசரி சராசரியை விட அதிக தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
பிரதமர் மோடி பிறந்தநாளை தவிர மற்ற நாட்களில் செயல்படாத மாநிலங்களாகவே இவை இருந்து வருகின்றன. எனவே பிரதமர் நரேந்திர மோடி அவரது பிறந்தநாளை தினமும் கொண்டாட வேண்டும் என்று விரும்புகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.