1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 13 ஜூலை 2020 (07:47 IST)

காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள மாட்டேன்: சச்சின் பைலட் அறிவிப்பால் பரபரப்பு

காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள மாட்டேன்
ராஜஸ்தான் மாநிலத்தில் அரசியல் குழப்பம் கடந்த சில நாட்களாக நிலவி வரும் நிலையில் இன்று காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. துணை முதல்வர் சச்சின் பைலட் காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக திடீரென திரும்பியுள்ள நிலையில் ராஜஸ்தானில் இன்று காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறுகிறது 
 
அனைத்து காங்கிரஸ் எம்எல்ஏ க்களும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என விப் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ராஜஸ்தான் காங்கிரஸ் பொறுப்பாளர் அவினேஷ் பாண்டே என்பவர் கூறியுள்ளார். மேலும் அசோக் கெலாட் ஆட்சிக்கு 109 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் கலந்துகொள்ள மாட்டேன் என சச்சின் பைலட் அறிவிப்பு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எம்எல்ஏக்கள் ஆதரவு எனக்கு மட்டுமே உள்ளதாகவும் எனவே இன்று ராஜஸ்தானில் நடைபெறும் காங்கிரஸ் கூட்டத்தில் கலந்துகொள்ள மாட்டேன் என்றும் ஜெய்ப்பூர் திரும்பிச் செல்லும் எண்ணம் இப்போது தனக்கு இல்லை என்றும் சச்சின் பைலட் தெரிவித்துள்ளார்
 
முதல்வர் அசோக் கெலாட் அவர்களுக்கு பெரிய அளவில் எம்.எல்.ஏக்கள் ஆதரவு இல்லை என்று சச்சின் பைலட் தெரிவித்துள்ளார் என்பதும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தியை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். ராஜஸ்தானில் ஏற்பட்டுள்ள இந்த அரசியல் குழப்பத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது