ஜனாதிபதி தேர்தலில் தோல்வி: யஷ்வந்த் சின்ஹா எடுத்த அதிரடி முடிவு
சமீபத்தில் நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியடைந்த யஷ்வந்த் சின்ஹா அதிரடி முடிவு எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
ஜகவிலிருந்து இருந்தபோது நிதியமைச்சராக இருந்து அதன்பின்னர் அந்த கட்சியில் இருந்து விலகிய யஷ்வந்த், அதன்பின்னர் மம்தா பானர்ஜி கட்சியில் சேர்ந்தார்.
இந்த நிலையில் தான் வேறு எந்த கட்சியிலும் சேரப் போவதில்லை என்றும் சுதந்திரமாக இருக்க போகிறேன் என்றும் கூறியுள்ளார். தனக்கு 84 வயது ஆகிறது என்றும் எவ்வளவு சிறப்பாக இருப்பேன் என்பதை நான் பார்க்க வேண்டும் என்றும் வாழ்க்கையில் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்றும் அவர் கூறியிருந்தார்
கடந்த ஆண்டு மார்ச் மாதம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த அவர் இனி எந்த கட்சியிலும் தான் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.