வாக்கு இயந்திரங்கள் மீது நம்பிக்கையில்லை: முன்னாள் முதல்வர்

vote
வாக்கு இயந்திரங்கள் மீது நம்பிக்கையில்லை: முன்னாள் முதல்வர்
siva| Last Updated: வியாழன், 4 மார்ச் 2021 (20:39 IST)
இந்தியாவில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்புவரை வாக்குச்சீட்டுகளில் தான் தேர்தல் நடந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக வாக்கு எந்திரங்கள் மூலம் தேர்தல் நடைபெற்று வருகிறது


வாக்கு இயந்திரங்கள் மூலம் தேர்தல் நடைபெறுவதால் அதில் முறைகேடுகள் நடக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் இந்த குற்றச்சாட்டை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ளவில்லை

இந்த நிலையில் வாக்கு இயந்திரங்கள் மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என முன்னாள் உத்தரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் கூட வாக்கு சீட்டு முறையில்தான் நடைபெற்றது என்றும், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மீது எனக்கு மட்டுமின்றி யாருக்குமே நம்பிக்கை இல்லை என்றும் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்
ஆனால் அதே நேரத்தில் வாக்கு இயந்திரத்தின் மூலம் தேர்தலில் முறையீடு செய்யலாம் என இதுவரை யாரும் நிரூபிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதுஇதில் மேலும் படிக்கவும் :