புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 10 நவம்பர் 2021 (17:54 IST)

விராட் கோலியின் மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்த இளைஞர் கைது!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் மகளுக்கு ஆன்லைன் மூலம் பாலியல் மிரட்டல் விடுத்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது 
 
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி கடந்த சில மாதங்களாக சரியாக விளையாடாததால் ஆத்திரமடைந்த ஒரு சில ரசிகர்கள் அவரை கடுமையாக விமர்சனம் செய்தனர்
 
இதனை அடுத்து இளைஞர் ஒருவர் அத்து மீறி விராத் கோலியின் மகளுக்கு பாலியல் மிரட்டல் ஆன்லைன் மூலம் கொடுத்ததாக தகவல்கள் வெளியானது. இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் போலீசார் விசாரணை செய்ததில் ஹைதராபாத்தைச் சேர்ந்த இளைஞர் தான் விராட் கோலி மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது
 
இதனை அடுத்து அவர் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும் அவரிடம் போலீசார் விசாரணை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன