1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: புதன், 10 நவம்பர் 2021 (10:12 IST)

ஷங்கர் மகளை அடுத்து நடிக்க வரும் பிரபல இயக்குனரின் மகள்!

ஷங்கர் மகளை அடுத்து நடிக்க வரும் பிரபல இயக்குனரின் மகள்!
பிரபல இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதிஷங்கர் நடிக்க வந்துள்ளார் என்பதும் அவர் கார்த்திக் நடிப்பில் முத்தையா இயக்கத்தில் உருவாகிவரும் விருமன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் ஷங்கர் மகளை அடுத்து பிரபல இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன் மகள் சரஸ்வதி என்பவரும் நடிக்க வருகிறார். இவர் மலையாள திரைப்படம் ஒன்றில் அறிமுகமாக இருப்பதாகவும் இந்த படத்தை அருண் மாதேஸ்வரன் என்பவர் இயக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன 
 
ஷங்கர் மகளை அடுத்து ராஜீவ்மேனன் மகனும் நடிக்க வந்ததை அடுத்து திரையுலகில் மேலும் சில வாரிசுகளும் நடிக்க வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது