1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : சனி, 9 செப்டம்பர் 2017 (12:53 IST)

மனைவிக்கு குடிநீரில் ஆசிட் கலந்து கொடுத்த கொடூர கணவன்!!

திருமணமானத்தின் போது வரதட்சணையாக கேட்கப்பட்ட பணத்தை இன்னும் தராததால் கணவன் தனது மனைவிக்கு குடிநீரில் ஆசிட் கலந்து கொடுத்த சம்பவம் அதிர்ச்சி அளித்துள்ளது.


 
 
கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்தவர்கள் ஜாவித், பஷீனா தம்பதியினர். இவர்கள் பெங்களூருவில் வசித்து வருகின்றனர்.
 
பஷீனாவிடம் மாப்பிள்ளை வீட்டார் ரூ.1.5 லட்சம் பணம் மற்றும் நகை கேட்டுள்ளனர். பலமுறை வரதட்சணை கேட்டு கொடுமை செய்து வந்துள்ளனர். 
 
இந்நிலையில் ஒருநாள் பஷீனா சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது, கணவரிடம் தண்ணீர் கேட்டுள்ளார். கணவரும் தண்ணீர் கொண்டுவர அதை குடித்த பஷீனா ரத்த வாந்தி எடுத்துள்ளார்.
 
ஆனால் எந்தவித உதவிகளும் செய்யாமல் பஷீனாவின் கணவர் மற்றும் குடும்பத்தினர் இருந்துள்ளனர். பின்னர் பஷீனா உறவினர், அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.
 
தற்போது கோழிக்கோட்டில் உள்ள மருத்துவமனையில் பஷீனா சிகிச்சை பெற்று வருகிறார். தண்ணீரில் ஆசிட் கலக்கப்பட்டு கொடுத்தால் இவ்வாறு ஏற்பட்டுள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.