செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 30 மே 2022 (15:35 IST)

24 மணி நேரமும் நூடுல்ஸ்தான் சாப்பாடு! – விரக்தியில் கணவன் எடுத்த முடிவு!

கர்நாடகாவில் நூடுல்ஸை மட்டுமே உணவாக மனைவி சமைத்து கொடுத்து வந்ததால் விரக்தியடைந்த கணவன் எடுத்த முடிவு வைரலாகியுள்ளது.

உலகம் முழுவதும் திருமணமான தம்பதிகள் இடையே மோதல் வருவது சகஜமான ஒன்றுதான். ஒருசில மோதல் சம்பவங்களுக்கான காரணங்கள் மிகவும் சிறுபிள்ளைத்தனமாக கூட இருக்கும். அதுபோல சின்ன சின்ன விஷயங்கள் எல்லாம் பெரிய பிரச்சினையை உருவாக்கும்போது விவாகரத்து வரை செல்லும் விஷயங்களும் நடப்பது உண்டு.

கர்நாடகாவில் அப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது. கர்நாடகாவின் பல்லாரி பகுதியை சேர்ந்த ஒருவருக்கு சில ஆண்டுகள் முன்னதாக திருமணம் நடந்துள்ளது. அவர் மனைவி அவருக்கு தினமும் மேகி நூடுல்ஸை சமைத்து தந்துள்ளார். ஒருவேளை என்றால் பரவாயில்லை மூன்று வேளையும் நூடுல்ஸ் மட்டுமே சமைத்து தந்துள்ளார். சூப்பர்மார்க்கெட் போனால் பிற உணவுப்பொருட்களை விடவே மேகி நூடுல்ஸை அதிகமாக வாங்கி வந்துள்ளார்.

நூடுல்ஸால் வாழ்க்கையையே வெறுத்த அந்த கணவன் தனது மனைவியை விவாகரத்து செய்து விட்டாராம்.