செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 24 மே 2022 (09:55 IST)

தமிழகத்தை அடுத்து கர்நாடகாவிலும் முதலீடு செய்கிறது உள்ள லூலூ குழுமம்!

lulu
தமிழகத்தை அடுத்து கர்நாடகாவிலும் முதலீடு செய்கிறது உள்ள லூலூ குழுமம்!
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சமீபத்தில் துபாய் சென்றிருந்தபோது லூலூ குழுமம் தமிழகத்தில் முதலீடு செய்ய ஒப்புக் கொண்டது என்பதும் இதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆனது என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் தமிழகத்தை அடுத்து கர்நாடகாவிலும் ரூபாய் 2000 கோடி முதலீடு செய்ய லூலூ குழுமம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
 
இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கர்நாடக மாநில முதல் அமைச்சர் பசவராஜ் பொம்மை மற்றும் லூலூ குழுமத்தின் தலைவர் இடையே நடைபெற்றது
 
4 ஷாப்பிங் மால்கள் கர்நாடக மாநிலத்தில் லூலூ அமைக்க உள்ளதாகவும் இதன் மூலம் 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் கர்நாடக மாநில அரசு தெரிவித்துள்ளது