1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva

கொரோனாவால் உயிரிழந்த கணவர்: சோகம் தாங்காமல் மனைவி தற்கொலை!

கொரோனாவுக்கு கணவர் பலியான சோகம் தாங்க முடியாமல் அவரது மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
சமீபத்தில் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். இதனையடுத்து அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் 
 
கொரோனாவால் தனது கணவர் உயிரிழந்துவிட்டதாக வந்த தகவலை அடுத்து அவருடைய மனைவி அதிர்ச்சி அடைந்தார். கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை பயன்படுத்தி அவரது உடலை மயானத்திற்கு எடுத்துச் செல்ல மருத்துவ ஊழியர்கள் ஏற்பாடு செய்து கொண்டிருந்தனர்
 
இந்த நிலையில் தனது கணவர் கொரோனாவால் இறந்த அதிர்ச்சியில் இருந்து மீளாத மனைவி அந்த மருத்துவமனை கட்டிடத்தில் இருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொண்டார். இந்த சம்பவம் மத்திய பிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கணவரின் இழப்பை தாங்க முடியாமல் மனைவியும் தற்கொலை செய்து கொண்டதையடுத்து அவரது குடும்பத்தினர் கடும் சோகத்தில் உள்ளனர்