1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 13 ஜூன் 2024 (12:27 IST)

பூரி ஜெகந்நாதர் கோயிலின் 4 கதவுகளும் திறப்பு..! பதவியேற்ற மறுநாளே முதல்வர் அதிரடி..!!

Puri Temple Odisa
கொரோனா தொற்றால் மூடப்பட்ட ஒடிசா மாநிலம் பூரிஜெகந்நாதர் கோயிலின் நான்கு கதவுகளும் பக்தர்களின் வசதிக்காக முதல்வர் மோகன் சரண் மாஜி மற்றும் அமைச்சர்கள் முன்னிலையில் இன்று திறக்கப்பட்ட
 
கொரோனா தொற்று காரணமாக முந்தைய பிஜு ஜனதா தளம் அரசு, பூரி ஜெகந்நாதர் கோயிலின் நான்கு வாயில்களில் மூன்று கதவுகளை மூடியது. பக்தர்கள் கோயிலின் சிங்கதுவாரா வழியாக மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

வாயிலின் மற்ற மூன்று வாயில்களும் மூடப்பட்டன. இதனால் பக்தர்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வந்தனர். பூரி ஜெகந்நாதர் கோயிலின் அனைத்து கதவுகளும் திறக்கப்படும் என்பது பாஜகவின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக இருந்தது.
 
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் ஒடிசாவில் முதன்முறையாக பாஜக ஆட்சியைக் கைப்பற்றியுள்ள நிலையில், அம்மாநிலத்தின் முதல்வராக மோகன் மாஜி பதவியேற்றுக் கொண்டார்.

Puri Temple
இந்நிலையில்  பதவியேற்ற மறுநாளே பூரி ஜெகந்நாதர் கோயிலின் நான்கு கதவுகளும் பக்தர்களின் வசதிக்காக முதல்வர் மோகன் சரண் மாஜி மற்றும் அமைச்சர்கள் முன்னிலையில் இன்று திறக்கப்பட்ட. பகவான் ஜெகநாதருக்கு மங்கள அலட்டி சடங்கு செய்த பின்னர் கதவுகள் திறக்கப்பட்டன.
 
இதனைத் தொடர்ந்து  மாநில முதல்வர் மோகன் மாஜி, அவரது இரண்டு துணை முதல்வர்கள், பாஜக எம்.பி.க்கள் கட்சித் தலைவர்கள் கோயிலுக்கு வந்து ஜெகந்நாதரை வழிபட்டனர். மேலும் அவர்கள் கோயிலைச் சுற்றி ‘பரிக்ரமா’ நடத்தினர்.