வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 17 ஜனவரி 2024 (13:35 IST)

ஆர்டர் செய்த சைவ மீல்ஸ் உணவு.. பருப்பில் இருந்த செத்த எலி.. அதிர்ச்சியில் வாடிக்கையாளர்..!

மும்பையில் ஒருவர் ஆன்லைன் மூலம்  சைவ மீல்ஸ் ஆர்டர் செய்த நிலையில்  அவருக்கு டெலிவரி செய்யப்பட்ட உணவில் பருப்பில் செத்த எலி இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். மேலும் அவருக்கு உடல் நல குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்யும் உணவில் அவ்வப்போது சுகாதார கேடாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. அந்த வகையில் மும்பையில் முன்னணி ஹோட்டல் ஒன்றில் கடந்த எட்டாம் தேதி  சுக்லா என்பவர் சைவ மீல்ஸ் ஆர்டர் செய்தார்.
 
அவர்  பருப்பை எடுத்து சாப்பிட தொடங்கியபோது அதில் டேஸ்ட் வித்தியாசமாக இருப்பதை உணர்ந்தார். இதனை அடுத்து உள்ளே பார்த்தபோது அதில்  செத்த   எலி இருப்பதை கடந்து அதிர்ச்சி அடைந்தார். இதனை அடுத்து அவருக்கு உடல்நிலை மோசமானதால் இரவு முழுவதும் வாந்தி எடுத்ததாகவும் அதன் பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிகிறது.

 இதனை அடுத்து பன்னிரண்டாம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவுடன் அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை எப்.ஐ.ஆர் கூட பதிவு செய்யவில்லை. இதனை அடுத்து அவர் உடனடியாக தனியார் செய்தி நிறுவனங்களை அழைத்து பேட்டி கொடுத்துள்ளார். இது பெரும் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் தற்போது தான் போலீசார் இது குறித்து நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.

Edited by Mahendran