திங்கள், 30 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 20 டிசம்பர் 2022 (16:22 IST)

பதஞ்சலி யோகா க்ளாஸில் ஆபாச படம்! அரித்துவாரில் அதிர்ச்சி!

Camera
ஹரித்துவாரில் உள்ள பதஞ்சலி ஆய்வு மையம் நடத்திய யோகா வகுப்பில் ஆபாச படம் ஒளிபரப்பான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் பதஞ்சலி நிறுவனத்தின் சுகாதார ஆய்வு மையம் உள்ளது. இந்த மையம் வழியே மாதம்தோறும் ஆன்லைன் யோகா வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த வகுப்பில் ஆன்லைன் மூலமாக வெளிநாட்டினர் பலரும் கூட கலந்து கொள்கின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் ஜூம் செயலி வழியாக ஆன்லைன் யோகா க்ளாஸ் நடந்து கொண்டிருந்தபோது திடீரென திரையில் ஆபாச படங்கள் ஒளிபரப்பானது யோகா பயிற்சிக்கு வந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. யோகா வகுப்பில் கலந்து கொண்ட இளைஞர் ஒருவர்தான் அந்த வீடியோவை ஒளிபரப்பியிருந்தார் என்பது தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து அந்த இளைஞர் மீது பதஞ்சலி அமைப்பை சேர்ந்தவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் ஆபாசபடம் ஒளிபரப்பிய இளைஞர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Edit By Prasanth.K