வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: ஞாயிறு, 23 ஏப்ரல் 2023 (11:24 IST)

திருப்பதி தேவஸ்தானத்துக்கு வெளிநாட்டு கரன்சி மாற்ற அனுமதி: உள்துறை அமைச்சகம் தகவல்..!

Tirupathi
திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு வெளிநாட்டு கரன்சிகளை மாற்ற உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பல வெளிநாட்டு பக்தர்கள் வருகை தருகிறார்கள் என்பதும் அவர்கள் தங்கள் நாட்டு கரன்சிகள் காணிக்கையாக செலுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் வெளிநாட்டு கரன்சி சட்டத்தின் கீழ் அந்த காணிக்கையை செலுத்தியவர் குறித்த முழு விவரங்களை பின்பற்ற வேண்டும். ஆனால் இதற்கான உரிமைகளை திருப்பதி தேவஸ்தானம் புதுப்பிக்கவில்லை என்பதால் 30 கோடி மதிப்பில் ஆன வெளிநாட்டு கரன்ஸி தேவஸ்தானத்திலும் தேங்கியுள்ளது.

இந்த நிலையில் உண்டியலில் காணிக்கை செலுத்தும் வெளிநாட்டு பக்தர்களின் விவரத்தை தெரிந்து கொள்ள வாய்ப்பு இல்லை என்றும் இதற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும் தேவஸ்தானம் கேட்டுக் கொண்டது. இதனை ஏற்றுக்கொண்ட உள்துறை அமைச்சகம் காணிக்கை செலுத்தும் வெளிநாட்டு பக்தர்களை விவரம் அளிக்க தேவஸ்தானத்திற்கு விலக்கு அளித்து வெளிநாட்டு கரன்சிகளை பெற்றுக் கொள்ளவும் அதை வங்கியை மாற்றிக் கொள்ளவும் அனுமதி வழங்கி உள்ளது.

Edited by Mahendran