வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 23 ஏப்ரல் 2023 (11:08 IST)

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் பெயரில் 41 போலி இணையதளங்கள்: அதிர்ச்சி தகவல்..!

tirupathi
திருமலை திருப்பதி தேவஸ்தானம் பெயரில் 41 போலு இணையதளங்கள் உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தின் மூலம் தான் தரிசனம் டிக்கெட்டுக்கள் வாங்கப்படுகிறது என்பதும் பல சேவைகள் இதன் மூலம் செய்யப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமாக https://tirupatibalaji.ap.gov.in , https://tirupatibalaji-ap-gov.org ஆகிய இரண்டு இணையதளங்கள் இருக்கும் நிலையில் இவற்றில் ஒரு சில மாற்றங்கள் மட்டும் செய்து போலி இணையதளத்தை உருவாக்கி மோசடி செய்து வருவது தற்போது அம்பலமாகியுள்ளது.

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் பெயரில் 41 போலி இணையதளங்கள் இருப்பதாக தேவஸ்தானம் காவல்துறையில் புகார் அளித்துள்ளது. மேலும் இந்த இணையதளங்களை முடக்கவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பக்தர்கள் தேவஸ்தானத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் போலி இணையதளங்களை நம்ப வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Edited by Siva