1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 16 செப்டம்பர் 2020 (11:36 IST)

இந்தி, ஆங்கிலம் மட்டுமே இந்தியாவின் அலுவல் மொழி: உள்துறை அமைச்சகம்

இந்தி, ஆங்கிலம் மட்டுமே இந்தியாவின் அலுவல் மொழி
இந்தியாவின் அலுவல் மொழிகளில் ஒன்றாக தமிழும் ஆக வேண்டும் என்ற குரல் தமிழ்நாட்டில் இருந்து கடந்த சில ஆண்டுகளாக கோரிக்கை விடப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு ராஜ்யசபா எம்பி வைகோ கேள்வி எழுப்பினார். இந்த கேள்விக்கு பதிலளித்த மத்திய உள்துறை அமைச்சகம் இந்தியாவில் இந்தி ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகள் மட்டுமே அலுவல் மொழிகள் என்றும் பிற மொழிகளை அலுவல் மொழியாக்க திட்டம் எதுவும் இப்போதைக்கு இல்லை என்றும் எழுத்துபூர்வமான பதிலளித்துள்ளது 
 
அலுவல்மொழி திட்டத்தில் திருத்தம் செய்யும் திட்டம் இப்போதைக்கு இல்லை என மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சகம் கூறியிருப்பது வைகோவுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது
 
எனவே இப்போதைக்கு தமிழ் உள்பட வேறு எந்த மொழியும் அலுவல் மொழியாக்க வாய்ப்பில்லை என்பது இந்த பதிலில் இருந்து தெரிய வந்துள்ளதால் தமிழர்கள் தரப்பில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது