ஞாயிறு, 17 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: செவ்வாய், 21 ஜூன் 2016 (16:33 IST)

தயாராக இருங்கள்! - இமயமலை அடிவாரத்தில் உணவு பஞ்சம்

புவிவெப்பமயமாகி வருவதை அடுத்து, இந்தியா உட்பட இமயமலை அடிவாரத்தில் உள்ள நாடுகள் அனைத்தும் உணவு நெருக்கடிக்கு உள்ளாகலாம் என்று பல்வேறு வல்லுநர்கள் எச்சரித்திருக்கிறார்கள்.
 

 
காத்மண்டுவைத் தளமாகக் கொண்டு, ஒருங்கிணைந்த மலை வளர்ச்சிக்கான சர்வதேச மையத்தின் டைரக்டர் ஜெனரல் டேவிட் மோல்டன், இது தொடர்பாகக் கூறுகையில், “மலைகளின் பிரச்சனைகளும் அதிலிருந்து உருவாகும் நீரோடைகளும் அந்த இடங்களில் உள்ள பிராந்தியங்கள் மற்றும் உலகத்தின் விவாதப் பொருளாக மாறுவதற்கு நாம் கடுமையாக உழைக்க வேண்டியது அவசியமாகும்.
 
இவற்றை வளர்த்தெடுக்கக்கூடிய விதத்தில், இவற்றில் நமக்கு வழிகாட்டக்கூடிய விதத்தில், புதிய அறிவு நமக்குத் தேவை’’ என்று கூறியுள்ளார்.
 
மேலும், இமயமலையின் அடிவாரத்தில் உள்ள நாடுகள் தங்களுக்கிடையே உணவு, தண்ணீர் மற்றும் எரிசக்தி ஆகியவை குறித்து பரஸ்பரம் விவாதித்து தங்களை வலுப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டிருக்கிறது என்று விஞ்ஞானிகள் அறிவுறுத்துகிறார்கள்.
 
உலகில் உள்ள ஏழைகளில் 40 சதவீதத்தினர் இமயமலை அடிவாரங்களில் உள்ள நாடுகளில் வசிக்கிறார்கள். இம்மக்கள் தொகையில் 51 சதவீதத்தினர் உணவு-எரிசக்தி பற்றாக்குறையுடன் காணப்படுபவர்களாகும். எனவே, உணவு, தண்ணீர் மற்றும் எரிசக்தி பாதுகாப்பு என்பது இந்நாடுகளின் அத்தியாவசியமானவைகள் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.