வியாழன், 10 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 7 ஆகஸ்ட் 2024 (18:21 IST)

100 கிராம் எடையை வினேஷ் குறைத்திருக்க வேண்டும். இனி அவருக்கு வாய்ப்பில்லை: ஹேமாமாலினி

ஒலிம்பிக் போட்டியை பொறுத்தவரை 100 கிராம் எடை அதிகம் என்பது ஒரு பெரிய குறை தான், அதை அவர் குறைத்திருக்க வேண்டும், இனி அவருக்கு வாய்ப்பு கிடைக்காது என்று நடிகை ஹேமா மாலினி கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

50 கிலோ மல்யுத்த போட்டியில் கலந்து கொண்ட இந்தியாவைச் சேர்ந்த வினேஷ் போகத் அரையிறுதி போட்டியில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற நிலையில் அவரது எடை 100 கிராம் அதிகமாக இருப்பதாக கூறி தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் நடிகையும் பாஜக எம்பியுமான ஹேமமாலினி இது குறித்து கூறிய போது ’இது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது, 100 கிராம் எடை கூடுதலாக இருந்ததற்காக தினேஷ் போக தகுதி நீங்கள் செய்யப்பட்டது விசித்திரமாக உள்ளது.

விளையாட்டு வீராங்கனைகள் எடையை கட்டுக்குள் வைத்திருப்பது முக்கியம், இது அனைவருக்கும் ஒரு பாடம், 100 கிராம் எடையை கூட பெரிய விஷயமாக இருக்கும், வினேஷ் 100 கிராம் எடையை குறைத்து இருக்க வேண்டும். ஆனால் இனி அவருக்கு வாய்ப்புகள் கிடைக்காது’ என்று கூறியுள்ளார். அவரது இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Siva