ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 8 ஜனவரி 2024 (17:22 IST)

வெளுத்து வாங்கிய கனமழை.! வீடுகளில் மழைநீர்.!! முதல்வர் ரங்கசாமி நேரில் ஆய்வு..!!

pondy cm
புதுச்சேரியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக மழை நீர் சூழ்ந்துள்ள பகுதியில் முதலமைச்சர் ரங்கசாமி ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.
 
புதுச்சேரியில் நேற்று இரவு முதல் தொடர் மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக நகரின் தாழ்வான பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கி உள்ள நிலையில் பாவாணர் நகர் பகுதியில் உள்ள குடியிருப்புகளில் கழிவுநீருடன் மழை நீர் கலந்து வீடுகளுக்குள் புகுந்துள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள மக்கள் வீடுகளில் இருந்து வெளியே வர முடியாமல் முடங்கி உள்ளனர்.
 
இந்நிலையில் மழையால் பாதிக்கப்பட்டுள்ள பாவாணர் நகர் பகுதியில் முதலமைச்சர் ரங்கசாமி நேரில் சென்று ஆய்வு செய்தார் அப்போது அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மழைநீர் தேங்காமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். 

அவர்களின் கோரிக்கையை கேட்டறிந்த முதல்வர் ரங்கசாமி வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.  இனி வரும் காலங்களில் மழை நீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தார்.
 
இதேபோல் பாவாணர் நகர் பகுதியில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி, மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் வைத்தியலிங்கம் எம்பி பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினர்.மேலும் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் பால், பிரட் பிஸ்கட் ஆகியவற்றை வழங்கினர்.