திங்கள், 3 மார்ச் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 3 மார்ச் 2025 (11:09 IST)

அதிக வெப்பம்.. 12-3 மணி வரை வெளியே வர வேண்டாம்: சுகாதாரத்துறை எச்சரிக்கை..!

Heat
வரும் நாட்களில் வெப்பம் அதிகமாக இருக்கும் என்பதால், மதியம் 12 முதல் 3 மணி வரை அவசிய தேவை இல்லை என்றால் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என கர்நாடக மாநில சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
கர்நாடக மாநிலத்தில் கடந்த சில நாட்களாக அதிக வெப்பம் பதிவாகி வரும் நிலையில், வெப்பம் தொடர்பான நோய்கள் பாதிக்கப்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
 
கடந்த சில நாட்களாக வெப்ப அலை வீசி வருவதால், இனி வரும் நாட்களிலும் கூடுதலாக வெயில் அடிக்க வாய்ப்பு உள்ளது. எனவே, பகல் 12 மணி முதல் 3 மணி வரை முடிந்தவரை வீட்டை விட்டு வெளியேறுவதை மக்கள் தவிர்க்குமாறு சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
 
மேலும், வெப்பம் தொடர்பான நோய்கள் பாதிக்காமல் இருக்க, தண்ணீர் அடிக்கடி குடிக்க வேண்டும். அதோடு, எலுமிச்சை ஜூஸ், மோர், தர்ப்பூசணி போன்ற பானங்களை குடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
குழந்தைகள், கர்ப்பிணிகள், இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள், ரத்த அழுத்தம் உள்ளவர்கள், முதியவர்கள் ஆகியோர் பாதுகாப்புடன் வீட்டில் இருக்க வேண்டும். மேலும், பகல் நேரத்தில் வெளியில் சென்று செய்யும் பணிகளை தவிர்க்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது
 
Edited by Mahendran