ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 30 ஜூலை 2019 (18:55 IST)

பெண்ணை விட்டு விட்டு ஓடிய பலே கொள்ளையன்: மடக்கி பிடித்த போலீஸ்

ஆந்திராவில் பெண்ணை கடத்தி கொண்டு தப்பிய கொள்ளைக்காரன், மீண்டும் அந்த பெண்ணை விட்டுவிட்டு செல்லும்போது போலீஸில் சிக்கினான்.

ஆந்திராவில் உள்ள ஹயத்நகரை சேர்ந்தவர் யாதவய்யா. அந்த பகுதியில் டீ கடை நடத்தி வரும் இவருக்கு சோனி என்ற மகள் உள்ளார். சோனி அருகிலுள்ள கல்லூரியில் பி பார்ம் படித்து வந்திருக்கிறார். யாதவய்யாவுக்கு ரவி ஷங்கர் என்பவரோடு பழக்கம் ஏற்பட்டுள்ளது. ரவி ஷங்கர் தனக்கு நிறைய நிறுவனங்களை தெரியுமென்றும், அங்கே சோனிக்கு வேலை வாங்கி தருவதாகவும் கபட நாடகம் ஆடியுள்ளார். இதையறியாத யாதவய்யா தன் மகளை ரவிஷங்கரோடு அனுப்பி வைத்திருக்கிறார்.

அதற்கு பிறகு ரவிஷங்கர் போனை எடுக்கவேயில்லை. இதையடுத்து யாதவய்யா போலீஸில் புகார் அளித்தார். போலீஸின் கெடுபிடியான சோதனைகளிலிருந்து தப்ப முடியாது என்று உணர்ந்த ரவிஷங்கர் அத்தங்கி பகுதியில் உள்ள பேருந்து நிலையத்தில் சோனியை விட்டிவிட்டு ஓடிவிட்டான்.

ரவிஷங்கரின் கார் எண்ணை வைத்து பல இடங்களிலும் தேடி வந்தனர் போலீஸ். இந்நிலையில் அந்தங்கி பகுதியில் ரவிசங்கர் டோல்கேட்டை கடந்து சென்றது போலீஸுக்கு தெரிய வந்தது. தொடர்ந்து சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போலீஸ் ரவிஷங்கரை வளைத்து பிடித்து கைது செய்தனர். இவர் மேலும் பல இடங்களில் குற்ற செயல்களில் ஈடுப்பட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.