ஆண் ஊழியர்களுக்கும் மகப்பேறு விடுமுறை: அரசு அதிரடி உத்தரவு
அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் பெண்களுக்கு மட்டுமே இதுவரை மகப்பேறு விடுமுறை அளிக்கப்பட்டு வந்த நிலையில் ஹரியானா மாநிலத்தில் ஆண்களுக்கும் மகப்பேறு விடுமுறை அளிக்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
பிறந்த குழந்தையை முதல் 15 நாட்களுக்கு தாயால் மட்டும் பராமரிப்பது கடினம் என்ற நிலையில் தற்போது ஹரியானாவில் பிறக்கும் குழந்தையை பராமரிப்பதற்காக அனைத்து அரசுத் துறையில் பணிபுரியும் ஆண் ஊழியர்களுக்கும் 15 நாள் மகப்பேறு விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் மனோகர் லால் அதிரடியாக உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். இருப்பினும் இது தனியார் நிறுவனங்களுக்கு பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் இந்த விடுமுறை முதல் குழந்தைக்குக் மட்டுமா? அல்லது அடுத்தடுத்த பிறக்கும் குழந்தைகளுக்கும் உண்டா? என்பது குறித்த தகவல் இதுவரை இல்லை.
மேலும் ஹரியானா மாநிலத்தில் பெண் போலீஸ் படைகளின் வலிமையை அதிகரிக்கும் வகையில் அவர்களின் எண்ணிக்கையை 11 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் முதல்வர் மனோகர் லால் தெரிவித்தார்...